Monday, January 21, 2013

படித்தவருக்கும் பாமரர்க்கும் புகைப்படக்கலை - 3

போட்டோவின் அடிப்படை

இந்த பாகத்தில் போட்டோ எடுக்க அடிப்படையான மூன்று விஷயங்கள பாக்க போறோம். இந்த மூணு விஷையங்களும் புரிஞ்சாதான் உங்களால நல்ல புகைப்படம் எடுக்க முடியும்.

இதுதான் எல்லா கேமராவுக்கும் பொதுவானது. நீங்க வச்சிருக்கிற பத்தாயிரம் ரூபாய் கேமராவும் சரி பத்து லெட்சம் குடுத்து வாங்குன கமெராவும் சரி இதுதான் அடிப்படை. இந்த மூனே விசையங்கள் புருஞ்சிடுசுன்னா உங்களுக்கு எந்த கேமராவையும் உபயோகபடுத்த வந்துடும்.

கொஞ்சம் நேரம் செலவு பண்ணி இதை கத்துக்கிடிங்கன்னா அப்புறம் எந்த கேமராவுக்கும் நீங்க "Hello!!!" சொல்லலாம்.

 

மூன்று முடிச்சி

ரஜினி கமல் படம் இல்லைங்க.. ஒரு நல்ல போட்டோ எடுக்கிறதுக்கு இந்த மூனும் வேணும்.

  1. திரை விலகும் நேரம் (Shutter Speed).
  2. Lens துவாரம் அளவு (Aperture)
  3. ISO (இத தமிழ்ல சொல்ல முடியல)

கீழ உள்ள படத்த பாருங்க...


 

இந்த படத்தில உள்ள மாதிரி இதில எது குறைஞ்சாலும் அதிகமானாலும் படம் சரியாய் வராது.

இந்த மூன்று முடிச்சையும் அடுத்த பாகத்தில் தெளிவா பாக்கலாம்.

 

 

Tuesday, January 15, 2013

படித்தவருக்கும் பாமரர்க்கும் புகைப்படக்கலை - 2

என்ன மாதிரி போட்டோ எடுக்க போறீங்க?

என்ன கேள்விடா இதுன்னு கேக்குறீங்களா... ஒரு ஒரு மனுசனுக்கும் ஒரு ஒரு feelings...அதனாலதான் கேக்குறேன்... எனக்கு தெரிஞ்ச வரைக்கும் போட்டோ என்ன மாதிரின்னு பிரிச்சா கீழ உள்ள எதாவது ஒரு வகைல போட்டுடலாம்.

பயண புகைப்படங்கள்: வெளியூர் போறதுன்றது இப்ப ரொம்ப சாதாரண விசையம்... அப்படி போகும் போது எடுக்கிற போட்டோவைத்தான் பயண புகைப்படங்கள் அப்படின்னு சொல்றாங்க. இந்த மாதிரியான படங்கள் பெரும்பாலும் அந்த இடத்தோட பெருமை சொல்ற மாதிரி இருக்கும், மதுரை பத்தி சொல்லனும்ன மீனாக்க்ஷி அம்மன் கோவில் போட்டோ போதும் இல்ல... அத மாதிரி.

கீழ உள்ள படத்த பாத்தாலே இது எந்த ஊருன்னு சொல்லிடுவீங்கதானே

உருவப் படம் (Portraiture) : நம்ம குமுதம் அட்டை படத்தில போடுற போட்டோ (அட நம்ம அமலா பால் போட்டோதன்பா...) இது மாதிரி போட்டோ எடுக்க நல்ல மூஞ்சி வேணும் இல்லேன்னா நல்ல போட்டோ எடுகிரவங்க வேணும். இந்த மாதிரி போட்டோ எடுக்க தெரிஞ்சவங்க காசு நிறைய பண்றாங்க.

கல்யாண புகைப்படங்கள்: இது கல்யாண வீட்ல மட்டும் எடுக்கிற போட்டோக்கள் இல்ல... கல்யாணத்துக்கு முன்னாலையே (நம்ம ஊர்ல இன்னும் ரொம்ப வரல) போட்டோ எடுத்து அதை கல்யாணம் நடக்கிற அன்னைக்கு போட்டு கட்டுவாங்க. சிங்கபூர்ல இதுக்கு நல்ல வருமானம் இருக்கு. அதே நேரத்தில நிறிய போட்டியும் இருக்கு. கீழ ஒரு போட்டோ உங்களுக்கு ஒரு idea வரதுக்காக.
விளையாட்டு புகைப்படங்கள்: விளையட்ட எடுக்கிற போட்டோ இல்ல விளையட்ட அழகா எடுக்கிற போட்டோ. நம்ம sachin sixer அடிக்கும் போது எடுக்கிற போட்டோ.. உதாரணம் கீழே..
மேக்ரோ புகைப்படங்கள்: இது நாம நிதமும் பாக்கிற சின்ன சின்ன பொருட்கள், ரொம்ப குட்டியான உயிரினங்கள் எல்லாத்தையும் பெரிய அளவில போட்டோவா ஆக்கிறதுதான் மேக்ரோ... கீழ உள்ள படம் நான் எடுத்தது..
தெரு புகைப்படங்கள்: ஆமாங்க நம்புங்க இந்த மாதிரி போட்டோ நிறைய பரிசுகளை ஜெயிச்சிருக்கு... தெருவில நிதமும் நடக்கிற விஷயங்களை போட்டோ பிடிக்கிறதுதான் இந்த மாதிரி படங்கள். கீழ ஒரு உதாரணம். (நீங்களும் தெருவில நடக்கிற குழாய்யடி சண்டைய முயற்சி பண்ணலாம்).
இந்த மாதிரி நிறைய மாதிரி போட்டோ எடுக்கலாம். உங்களுக்கு எது பிடிக்குமோ எது நல்ல வருதோ, எது வசதியா இருக்கோ அந்த மாதிரி புகை படங்கள் எடுக்க முயற்சி பண்ணுங்க. உலகத்தில் உள்ள எல்லா விதங்களையும் சொல்றது சாத்தியபடாத வேலை. என்னக்கு தெரிஞ்ச அளவு சொல்லி இருக்கேன். ஏதும் சந்தேகம் இருந்தா எனக்கு மின்னஞ்சுங்க

 

 

Monday, January 14, 2013

வாரம் ஒரு வலைமனை அறிமுகம்.... வலை 1

 

ஒரு ஒரு வாரமும் எனக்கு தெரிந்த வலைமனைகளை உங்களுக்கு அறிமுக படுத்துவதே இந்த தொடரின் நோக்கம். இந்த வரம்..

வலைமனை பெயர் :

cambridge in color

http://www.cambridgeincolour.com/
விளக்கம் :

இந்த வலைமனை photography பத்தி படிக்க நல்ல ஒரு வலைமனை. இதில மூணு முக்கியமான பிரிவுகள் இருக்கு.

Tools - இந்த பிரிவு போட்டோ எடுக்கும் போது தேவையான கணக்கீடுகள் மற்றும் கருவிகள் பத்தி குடுத்துருக்காங்க.

Tutorials - இந்த பிரிவுதான் உங்களுக்கு அதாவது photography பத்தி தெரிஞ்சிக்க நினைகிரவங்களுக்கு உபயோகமான பிரிவு.

Forums - இது ஒரு கலந்துரையாடல் பிரிவு. உங்கள்ளது கருத்துக்களை நீங்கள் பகிரிந்து கொள்ளலாம்.

வண்ணமிகு புகைப்படங்களுடன் புரியும் வகையில் விளக்கங்கள் கொடுக்கபட்டிருப்பது இந்த வலைமனைக்கு பலம். படித்து பயன் பெறுங்கள். பின்னூட்டம் இடுங்கள் உங்களுக்கு பிடிச்சிருந்தால்.

 

படித்தவருக்கும் பாமரர்க்கும் புகைப்படக்கலை - 1

இந்த தொடரை எழுதுவதற்கு என்னுடைய சின்ன வயசில படிச்ச சுஜாதாவின் "படித்தவருக்கும் பாமரர்க்கும் கணிபொறி" தொடர்தான் காரணம். நானும் கடந்த நாலு வருசமா photography பத்தி படிச்சும் கேட்டும் பார்த்தும் பழகியும் வந்துட்டு இருக்கேன். நமக்கு புரியிற மொழியில நம்ம மொழியில எழுதுறதுக்கான ஒரு முயற்சிதான் இந்த தொடர்.


தொடர் உள்ளாற போறதுக்கு முன்னால சில விசையங்கள். இந்த தொடர் யாருக்கு?
  1. கைல camera வசிக்கிட்டு அதனோட விருப்பதுக்கு வளைஞ்சி குடுக்குறவங்ககுகாக
  2. Photography ஒரு பெரிய சிக்கலான விசையம்னு நினைகிறவங்களுகும்
  3. camera அடிப்படை தொழில்நுட்பம் பத்தி தெரிஞ்சிகனும்னு நினைகிறவங்களுகும்
எல்லாம் சரி யாரு இந்த தொடரை படிக்க வேணாம் ?
  1. இந்த தொடர் முழுசும் பேச்சு வழக்குல எழுத போறேன், அதனால பொருட்குற்றம் சொற்குற்றம் சொல்ற நக்கீரர்கள் please escape!!!!
  2. போட்டோ எடுகிரஅதில உள்ள வரலாறு புவிவியல் தெரிஞ்சிக்கணும்னு நினைகிரவங்க.. என்னால இப்போ அப்படி எழுத முடியுமான்னு தெரியல... எழுதும் போது கண்டிப்பா லெட்டர் போடுறேன் வாங்க.
  3. போட்டோ தொழில்ல இருக்கிறவங்க... அண்ணா நீங்க எல்லாம் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அவளவுதான் என்னால சொல்ல முடியும்.
நாட்டுல எவளவோ விசையம் இருக்கும் போது ஏன்டா இத பத்தி எழுதுரன்னு நீங்க கேக்குறது என்னக்கு கேக்குது. நாம வாழ்க்கைல நமக்கே தெரியாம சின்ன வயசில் இருந்து நாம கூடவே வர விசையம் இந்த போட்டோ... நாம சின்ன வயசு போட்டோ பாக்கும் பொது வர பரவசம்.. நாம கல்லூரி போட்டோ பாக்கும் போது வர மகிழ்ச்சி... நாம கல்யாண போட்டோ (கல்யணம் கட்டுனவன்களுக்கு) பாக்கிறப்ப வர ......... (அவங்க அவங்க கற்பனைக்கு ஏத்த மாதிரி போட்டுக்குங்க).. இப்ப புரியுதா நாம போட்டோ மேட்டர் எவளோ முக்கியம்னு..
இந்த தொடரை படிக்கிறவங்ககிட்ட எப்படியாவது ஒரு கேமரா இருக்கும்னு நினைகிறேன் ... கேமரா அப்படினதும் பெரிய lens.. DSLR.. அப்படியெல்லாம் யோசிக்காதீங்க... என்னோட பெரும்பாலான போட்டோக்கள் என்னோட mobile phone உபயோகப்படுத்தி எடுத்ததுதான். அதனால போட்டோ எடுக்கிறத பத்தி கவலை படுங்க எந்த கேமரா அப்படிங்கறத பத்தி பின்னால பாத்துக்கலாம்.
ரொம்ப build-up குடுத்தாச்சி.... போதும்.. கீழ உள்ள போட்டோக்கள் நன் எடுத்தது. இந்த தொடர் முடியும் போது இதை விட நல்லாவே நீங்க போட்டோ எடுக்கலாம். .



அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த பொங்கல் திருநாளாம் தமிழர் திருநாளில் என்னுடைய வலைமனையை தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உங்களது ஊக்கமும் ஆர்வமும் என்னை மேலும் மேலும் எழுத தூண்டும். இந்த வலைமனை யாரையும் சண்டைக்கு இழுப்பதோ இல்லை சண்டை போடுவதனால பிரபலம் ஆகலாம் அப்படின்னோ ஆரம்பிக்கல. என்னக்கு தெரிஞ்சத என்னக்கு பிடிச்ச விசையங்கள உங்க கூட பகிர்ந்துகத்தான் இந்த வலைமனை.



இந்த நல்ல நாளில் என்னுடைய முதல் புகைப்படகலை பற்றின தொடரை தொடங்குவதில் பெருமை அடைகிறேன்.
என்னுடைய வலைமனை tamil35mm.blogspot.com பெரும்பாலும் புகைப்பட கலையை பற்றியும் புகைப்பட மேதைகள், வாழும் வல்லுனர்கள் பற்றியும் இருக்கும். அப்பப்போ ஊறுகாய் மாதிரி சினிமா பத்தியும் எழுத எண்ணம் இருக்கிறது.
உங்கள் ஆதரவுக்கு நன்றியுடன் இதோ எனது முதல் தொடர்....