Tuesday, January 15, 2013

படித்தவருக்கும் பாமரர்க்கும் புகைப்படக்கலை - 2

என்ன மாதிரி போட்டோ எடுக்க போறீங்க?

என்ன கேள்விடா இதுன்னு கேக்குறீங்களா... ஒரு ஒரு மனுசனுக்கும் ஒரு ஒரு feelings...அதனாலதான் கேக்குறேன்... எனக்கு தெரிஞ்ச வரைக்கும் போட்டோ என்ன மாதிரின்னு பிரிச்சா கீழ உள்ள எதாவது ஒரு வகைல போட்டுடலாம்.

பயண புகைப்படங்கள்: வெளியூர் போறதுன்றது இப்ப ரொம்ப சாதாரண விசையம்... அப்படி போகும் போது எடுக்கிற போட்டோவைத்தான் பயண புகைப்படங்கள் அப்படின்னு சொல்றாங்க. இந்த மாதிரியான படங்கள் பெரும்பாலும் அந்த இடத்தோட பெருமை சொல்ற மாதிரி இருக்கும், மதுரை பத்தி சொல்லனும்ன மீனாக்க்ஷி அம்மன் கோவில் போட்டோ போதும் இல்ல... அத மாதிரி.

கீழ உள்ள படத்த பாத்தாலே இது எந்த ஊருன்னு சொல்லிடுவீங்கதானே

உருவப் படம் (Portraiture) : நம்ம குமுதம் அட்டை படத்தில போடுற போட்டோ (அட நம்ம அமலா பால் போட்டோதன்பா...) இது மாதிரி போட்டோ எடுக்க நல்ல மூஞ்சி வேணும் இல்லேன்னா நல்ல போட்டோ எடுகிரவங்க வேணும். இந்த மாதிரி போட்டோ எடுக்க தெரிஞ்சவங்க காசு நிறைய பண்றாங்க.

கல்யாண புகைப்படங்கள்: இது கல்யாண வீட்ல மட்டும் எடுக்கிற போட்டோக்கள் இல்ல... கல்யாணத்துக்கு முன்னாலையே (நம்ம ஊர்ல இன்னும் ரொம்ப வரல) போட்டோ எடுத்து அதை கல்யாணம் நடக்கிற அன்னைக்கு போட்டு கட்டுவாங்க. சிங்கபூர்ல இதுக்கு நல்ல வருமானம் இருக்கு. அதே நேரத்தில நிறிய போட்டியும் இருக்கு. கீழ ஒரு போட்டோ உங்களுக்கு ஒரு idea வரதுக்காக.
விளையாட்டு புகைப்படங்கள்: விளையட்ட எடுக்கிற போட்டோ இல்ல விளையட்ட அழகா எடுக்கிற போட்டோ. நம்ம sachin sixer அடிக்கும் போது எடுக்கிற போட்டோ.. உதாரணம் கீழே..
மேக்ரோ புகைப்படங்கள்: இது நாம நிதமும் பாக்கிற சின்ன சின்ன பொருட்கள், ரொம்ப குட்டியான உயிரினங்கள் எல்லாத்தையும் பெரிய அளவில போட்டோவா ஆக்கிறதுதான் மேக்ரோ... கீழ உள்ள படம் நான் எடுத்தது..
தெரு புகைப்படங்கள்: ஆமாங்க நம்புங்க இந்த மாதிரி போட்டோ நிறைய பரிசுகளை ஜெயிச்சிருக்கு... தெருவில நிதமும் நடக்கிற விஷயங்களை போட்டோ பிடிக்கிறதுதான் இந்த மாதிரி படங்கள். கீழ ஒரு உதாரணம். (நீங்களும் தெருவில நடக்கிற குழாய்யடி சண்டைய முயற்சி பண்ணலாம்).
இந்த மாதிரி நிறைய மாதிரி போட்டோ எடுக்கலாம். உங்களுக்கு எது பிடிக்குமோ எது நல்ல வருதோ, எது வசதியா இருக்கோ அந்த மாதிரி புகை படங்கள் எடுக்க முயற்சி பண்ணுங்க. உலகத்தில் உள்ள எல்லா விதங்களையும் சொல்றது சாத்தியபடாத வேலை. என்னக்கு தெரிஞ்ச அளவு சொல்லி இருக்கேன். ஏதும் சந்தேகம் இருந்தா எனக்கு மின்னஞ்சுங்க

 

 

No comments:

Post a Comment